9th of June 2014
சென்னை::தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி, தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் தமிழிலும் சில படங்களை இயக்கி தற்போது இந்தித் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பிரபுதேவா.
சென்னை::தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி, தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் தமிழிலும் சில படங்களை இயக்கி தற்போது இந்தித் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பிரபுதேவா.
இவர்
திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே எண்ணற்ற கிசுகிசுக்களில்
அடிபட்டவர். தன் குழுவில் பணிபுரிந்த ரமலத்தை காதல் திருமணம் செய்து கொண்டு
குழந்தைகள் பெற்ற பின்னும் அதை மறைத்தே வந்தவர். பல வருடங்களுக்குப்
பிறகுதான் தனக்கு திருமணமானதையே தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன்
பிரபுதேவாவும், நயன்தாராவும் தீவிரமாகக் காதலித்து வந்தனர். பிரபுதேவாவை
திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்துவரான நயன்தாரா இந்து மதத்திற்குக் கூட
மாறினார். பிரபுதேவா காதல் மணம் புரிந்த ரமலத், விவாகரத்து கேட்டு
கோர்ட்டு படியேறிது வரை நடந்தது.
அதன் பின் என்ன
நடந்தோ தெரியவில்லை. பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணமும் செய்து
கொள்ளாமல் திடீரெனப் பிரிந்தனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களால் தான்
மிகவும் வெறுத்துப் போய் விட்டதாகக் கூறியிருக்கிறார் பிரபுதேவா. கடந்த சில
வருடங்களாக தனிமையில்தான் வாழ்ந்து வருவதாகவும், இனி அவரது வாழ்க்கையில்
எந்த பெண் துணையுமே தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். காதல் மனம்
புரிந்த மனைவியை பிரபுதேவா வெறுத்தாலும் தனது மகன்களுடன் மட்டும் எப்போதும்
சந்தோஷமாகச் சுற்றி வருகிறார். அவர்கள் மீது அளவு கடந்த பாசம்
வைத்திருக்கிறார். விரைவில் அவர்களுடன் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்
கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.
பிரபுதேவா இப்படி
சொன்னாலும் இந்தித் திரையுலகிலும் அவரைப் பற்றி கிசுகிசுக்கள் வந்த
வண்ணம்தான் உள்ளன. அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் அவரைத்
தொடர்புப்படுத்தி மும்பை பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
Comments
Post a Comment