12th of June 2014
சென்னை:நயன்தாரா தற்போது பாண்டிராஜ் டைரக்ஷனில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஜெகதீஷ் டைரக்ஷனில் உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படத்திலும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இரண்டு படங்களின் படப்படிப்பும் அருகருகே நடக்கிறது என்பதால் காலை, மாலை என மாறிமாறி நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் நயன்தாரா. சிம்பு படத்தில் நடித்துவிட்டு வரும் வரை உதயநிதி படத்தில் நயன்தாரா இல்லாத மற்ற காட்சிகளை படமாக்குகிறார்களாம். அவர் வந்தபின் உதயநிதியுடன் அவர் சம்பந்தப்பட காட்சிகளை படமாக்குகிறார்களாம்.
சிம்புவின் படப்பிடிப்பிலும் இதே மாதிரிதான். ஆனால் இரண்டு படப்பிடிப்புகளுக்கும் தன்னால் ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் நயன்தாரா. இதற்கு இரண்டு படக்குழுவினரும் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்களாம்
Comments
Post a Comment