30th of June 2014
சென்னை:அதிர்ஷ்டக்கார ஆர்யா…அவருக்கு மட்டும்தான் மச்சம்யா…” இந்த வார்த்தைகளைத்தான் சென்னையில் நடைபெற்ற ‘அமர காவியம்’ இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தவர் அவர்களது பேச்சுக்களில் குறிப்பிட்டிருப்பார்கள்.
மேடையில் ஆர்யாவின் ஒரு பக்கம் நயன்தாரா, மறுபக்கம் த்ரிஷா நிற்க எத்தனை பேர் காதுகளில் ‘புகை’ கிளம்பியதோ தெரியாது. தங்களது சொந்தப் படங்களின் நிகழ்ச்சிகளுக்கே அதிகம் வராத நயன்தாரா, த்ரிஷா ஆர்யா தயாரித்துள்ள ஒரு படத்திற்கு வருகிறார்கள் என்றால் சும்மாவா ?
அவர்கள் மட்டுமே ‘நான் கடவுள்’ பட நாயகி பூஜா, லேகா வாஷிங்கடன், ரூபா மஞ்சரி, படத்தின் நாயகி மியா ஜார்ஜ் அழகு தேவதைகளே மேடையில் நிறைந்திருந்தார்கள்.
ஆர்யாவைப் பற்றி பூஜா சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். “ஆர்யா நல்ல நண்பர். அனைத்து ஹீரோயின்களுடனும் கிசுகிசுக்கப்படுவார். அதற்குக் காரணம் ஆர்யா நல்லா ‘கடலை’ போடுவார்,” என்றார்.
நயன்தாரா பேசும் போது, “நான் பொதுவா என் படங்களோட விழாவுக்குக் கூட அதிகமா வந்ததில்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கன்னா அதுக்கக் காரணம் ஆர்யா. அவர், என் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி,” என்றார்.
Comments
Post a Comment