சுருதி ஹாசனுக்கு தொந்தரவுகள் தொடர்வதால் படப்பிடிப்புகளில் பாதுகாப்பு!!!

16th of June 2014
சென்னை:சுருதி ஹாசனுக்கு தொந்தரவுகள் தொடர்வதால் படப்பிடிப்புகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அறை குறை ஆடையில் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். இந்தியில் டிடே படத்தில் விலை மாது கேரக்டரில் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்து பரபரப்பை எற்படுத்தினார். இந்த நிலையில் மும்பையில் சுருதிஹாசன் தங்கி இருந்த வாடகை வீட்டில் ஒருவன் அத்து மீறி நுழைந்து சுருதியை தாக்கினான். போலீசார் அவனை கைது செய்தனர். இதனால் அந்த வீட்டை காலி செய்து விட்டு மும்பையிலேயே சொந்தமாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.


அதன் பிறகு தெலுங்கு படமொன்றில் தான் கவர்ச்சியாக நடித்த ஸ்டில்களை இன்டர் நெட்டில் பரப்பி விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தற்போது டேராடூனில் ஓட்டலில் தங்கி இருந்த போது ஒருவர் குடி போதையில் அறை கதவை தட்டி தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

இது போன்ற தொந்தரவுகள் காரணமாக சுருதி ஹாசனுக்கு படப்பிடிப்புகளில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. விஷால் ஜோடியாக பூஜை தமிழ் படத்திலும் யாரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படப்பிடிப்புகளிலும் தனியார் செக்யூரிட்டிகள் சுருதி ஹாசன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Comments