சிம்பு- ரஜினி மகள் சவுந்தர்யா மோதலுக்கு முற்றுப்புள்ளி!!!

10th of June 2014
சென்னை::ரஜினி மகள் சவுந்தர்யாவும், சிம்புவும் இணையதள பக்கத்தில் மோதிக்கொண்டனர்.ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான் படத்தை சமீபத்தில் பார்த்து சிம்பு தனது இணையதள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில்,‘கோச்சடையான் படம் எனக்கு பிடித்தது. சவுந்தர்யாவுக்கு நன்றி. ஹாலிவுட் படங்களுடன் கிராபிக்ஸ் பணிகளை ஒப்பிட முடியாவிட்டாலும் சவுந்தர்யாவின் முயற்சி பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அதற்கு சவுந்தர்யாவும் இணைய தளத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சிம்புவின் பாடல்பற்றி சவுந்தர்யா கருத்து கூறி இருந்தார். ‘நான் ஒரு பத்திரிகையாளராக இருந்திருந்தால் சிம்பு பாடல் பாடுவதை நிறுத்திக்கொள்ளக் கேட்டிருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். இது சிம்புவின் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. சவுந்தர்யா பற்றி அவர்கள் திட்டி கமென்ட் வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த விஷயத்தில் தலையிட்ட சிம்பு,‘யாரைபற்றியும் விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு புரிகிறது. யாரையும் திட்டும் போக்கை கைவிடுங்கள். என்னிடம் எப்படி அன்புகாட்டுகிறீர்களோ அதேபோல மற்றவர்கள் மீதும் அன்பு காட்டுங்கள். நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சவுந்தர்யா,‘சிறுவயது முதலே சிம்பு எனக்கு நண்பர். அவரைப்பற்றி நான் சொன்னது தமாஷுக்குதான். எங்களுக்குள் எந்த மனவருத்தமும் இல்லை என்றார். இத்துடன் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Comments