சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் காதலில் விழுந்தால் கேரியர் போய்விடும். குறிப்பாக மன நிம்மதியும போய்விடும்: தமன்னா!
3rd of June 2014
சென்னை:இந்தியில் சயூப் அலிகானுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வரும் படம்
ஹம்சகல்ஸ். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக பிபாசா பாசுவும் நடிக்கிறார்.
இப்படத்தை சாஜித்கான் என்ற இளவட்ட டைரக்டர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இதில் நடிப்பதற்கு தமன்னா கால்சீட் இல்லை என்று மறுத்து விட்டபோதும்,
அவருக்காக பல மாதங்களாக காத்திருந்து அவரை கமிட் பண்ணினார் சாஜித்கான்.
அதையடுத்து, படப்பிடிப்பு தொடங்கியபோது, பிபாசா பாசுவை விட தமன்னாவுக்கே
அதிக முக்கியத்துவம் கொடுத்த அவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும்
தமன்னாவுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டு திரிவதாக மும்பை மீடியாக்களில்
ஆரம்பத்தில் பரவிய செய்தி. இப்போது அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து
வருவதாக பரவியுள்ளது.
ஆனால் இந்த செய்தியை
அதிரடியாக மறுத்துள்ளர் தமன்னா. ஹம்சகல்ஸ் படத்தை இயக்கும் சாஜித்கான் எனது
சகோதரர் போன்றவர். நானும் அவரும் அண்ணன்-தங்கை போன்றுதான் பழகி
வருகிறோம். நாங்கள் பாசத்தோடு பழகுவதை மீடியாக்கள்தான் காதலாக திரித்து
செய்தி பரப்பி விட்டன என்று கூறும் தமன்னா, சினிமாவில் காதலிப்பதற்கு
பலமுறை சந்தர்ப்பங்கள் அமைந்தன. ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
காரணம், சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் காதலில்
விழுந்தால் கேரியர் போய்விடும். குறிப்பாக மன நிம்மதியும போய்விடும்
என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் காதல் கத்தரிக்காயை எல்லாம்
கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைத்திருக்கிறேன் என்கிறார் தமன்னா.
Comments
Post a Comment