5th of June 2014
சென்னை:கரண் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர் வடிவுடையான். இவர் தற்போது கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கிவருகிறார். இதிலும் கரண் நாயகனாக நடிக்கிறார். கூடவே இய்க்குனர் தருண்கோபி நடிக்கிறார்,
நாயகியாக திருப்தா என்ற மும்பை நடிகை நடிக்கிறார்.இதில் ஒரு காட்சியில் நாயகி தருண்கோபிக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சியாம். தருண்கோபிக்கு முத்தமா என்று அதிர்ச்சி அடைந்த நாயகிக்கு மயக்கமே வந்துவிட்டதாம். கதை சொல்லும்போது இதல்லாம் சொல்லவே இல்லையே என மறுத்துவந்தாராம் திருப்தா.
இருந்தாலும் மனம் தளராத இயக்குனர் நடிகையிடம் அந்த காட்சி குறித்த முக்கியத்துவத்தை விளக்கினாராம்.அதன்பின்னனே முத்தக் காட்சிக்கு சம்மதம் தெரிவித்தாராம் திருப்தா.
அந்த காட்சி எடுக்கும்போது படப்பிடிப்பில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மட்டுமே இருந்தனராம்.
Comments
Post a Comment