27th of June 2014
சென்னை:வாலிபராஜா’ படத்தில் கதாநாயகியாக விஷாகவும் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியும் நடித்திருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இருவருக்குமே கமல் இருக்கும் மேடையில் தாங்களும் இருக்கிறோமே என அளவு கடந்த பரவசம்.
அதனால் விஷாகா பேசும்போது கமலுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். தேவதர்ஷினி பேசும்போதோ “இதுவரை நான் அஜித், விஜய் ஆகியோர் படங்களில் எல்லாம் அக்கா, அண்ணி என ஏதோ ஒரு வேடத்தில் நடித்துவிட்டேன்.
ஏன், ரஜினி சார் கூட ‘எந்திரன்’ படத்தில் என்னை அக்கா என கூப்பிட்டுவிட்டார். இன்னும் கமல் சார் படத்தில் மட்டும் தான் நடிப்பது பாக்கி இருக்கிறது. அவரது அடுத்த படத்தில் அண்ணியாகவோ, இல்லையென்றால் ஒரு பன்னியாக நடிக்க கூட தயாராக இருக்கிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.தான் பேசும்போது இதை குறிப்பிட்ட கமல், “ஒருவர்(விஷாகா) என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். தேவதர்ஷினி பேசும்போது அக்கா, அண்ணி வேடம் இருந்தால் கூட பரவாயில்லை என்று சொன்னார். நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?. நடிகை கஸ்தூரி எனக்கு மகளாக நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி எனக்கு மகனாக நடித்திருக்கிறார்.
அவ்வளவு ஏன் என் அண்ணன் மகள் எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். அதனால் உங்களுக்கான வேடம் என் படத்தில் இருந்தால் அது கண்டிப்பாக உங்களை தேடிவரும்” என்று கூற தேவதர்ஷினியின் முகத்தில் அளவில்லாத சந்தோஷம. நகைச்சுவை நாயகியான கோவை சரளாவையே கதையின் தன்மை கருதி தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தவர் தானே கமல். நிச்சயம் தேவதர்ஷினிக்கும் கமல் படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.

Comments
Post a Comment