கடைசி நாள் படப்பிடிப்பின்போது அனைவரிடமும் சொல்வது போன்று சிம்புவிடமும் சென்று கேசுவலாக குட்பை சொன்ன ஹன்சிகா!!!

10th of June 2014
சென்னை:வாலு படத்தில் நடிக்கத் தொடங்கியபோது சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதல், ஓரிரு மாதத்திலேயே கருகி விட்டது. அதனால் அப்படத்தில் தான் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தார் ஹன்சிகா. இதனால் தயாரிப்பாளர், டைரக்டருக்கு தர்மசங்கடமாயிற்று. இருப்பினும், படத்தை ஹன்சிகா முடித்துக்கொடுத்தால்தானே ரிலீஸ் பண்ண முடியும் என்பதால், ஹன்சிகாவிடம் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவரை வாலு படத்தில் சிம்புவுடன் நடிக்க வைத்தனர்.

அதுவும், டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் என்பதால், தயங்கியபடி மனதில் இறுக்கம், முகத்தில் மலர்ச்சி என்று இப்போது அதில் நடித்துக்கொடுத்து விட்டார் ஹன்சிகா. கடைசி நாள் படப்பிடிப்பின்போது அனைவரிடமும் சொல்வது போன்று சிம்புவிடமும் சென்று கேசுவலாக குட்பை சொன்னாராம் ஹன்சிகா. ஆனால் அவர் ஜாலியாக சொன்னபோதும் சிம்புவின் கண்களில் கலக்கம் தென்பட்டதாம்.
 
ஆனபோதும், அதை கண்டுகொள்ளாமல் பை சொல்லி விட்டு எஸ்கேப்பாகி விட்டாராம் ஹன்சிகா. மேலும், இந்த படத்தில் நிஜமாக சிம்பு- ஹ்ன்சிகா இருவரும் காதலித்து பிரிந்துள்ளனர். ஆனால், படத்திலோ அவர்கள் இருவரும் காதலில் ஒன்று சேர்வது போன்று படத்தின் க்ளைமாக்ஸ் உள்ளதாம்.

Comments