மீண்டும் பி.சி.ஸ்ரீராம்!!!

15th of June 2014
சென்னை:தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதவிவை பார்த்த பிறகே, தமிழகத்தில் பலருக்கு ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்படி அந்த ஆசையில் சென்னைக்கு வந்த பலரும் தற்போது முன்னணி ஒளிப்பதிவாளர்களாக இருக்கிறார்கள்.

மணிரத்னத்துடன் இணைந்து ஸ்ரீராம், பணியாற்றிய படங்கள் ஒளிப்பதிவில் பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர், குருதிப்புனல் படத்தின்  மூலம் தன்னை சிறந்த இயக்குநராகவும் அடையாளம் காட்டினார். கடந்த சில வருடங்களாக படங்களைக் குறைத்துக் கொண்ட இவர், சில குறிப்பிட்ட படங்களில் மட்டும் பணியாற்றி வந்தார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தனது ஒளி ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிவு செய்துவிட்டார்.

தற்போது பால்கி இயக்கத்தில், இளையராஜா இசையில், அமிதாப் பச்சன், தனுஷ் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிக்கும் 'ஷமிதாப்' என்னும் இந்தி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியில் பணியாற்றும் நான்காம் படம் இது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐ' படத்தின் ஒளிப்பதிவாளர் இவர் தான்.

தற்போது இந்திப் படம் ஷமிதாப், தமிழில் ஐ என்று பணியாற்றி வரும் பி.சி.ஸ்ரீராம், மேலும் ஒரு பிரபல இயக்குநரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மொத்தத்தில், 2015ஆம் ஆண்டில் பி.சி, ரொம்ப பிஸியான ஒளிப்பதிவாளர்.

Comments