ரஜினிகாந்த் ரசிகர்களிடமிருந்து அவருக்குக் கிடைக்கும் அன்பை மிகவும் மதிக்கிறார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்: பாராட்டித் தள்ளுகிறார் சோனாக்ஷி சின்ஹா!!!
1st of June 2014
சென்னை:ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முன் 'எந்திரன்' படத்திலும் ரஜினிகாந்த், மற்றொரு நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

'படையப்பா' படத்தில் வரும் வசனம் போல எவ்வளவு வயதானாலும், இன்னும் இளமையான தோற்றத்துடன் ரஜினிகாந்த் இருப்பதால் இன்றைய இளம் ஹீரோயின்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இது பல இளம் ஹீரோக்களை நிச்சயம் பொறாமைப்படவே வைத்திருக்கும். ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் அவரைப் புகழ்ந்து பேசுவது வாடிக்கையான ஒன்றுதான். இப்போது அந்த பட்டியலில் சோனாக்ஷியும் இணைந்திருக்கிறார்.
“ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர். அவர் நடித்த படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால், 'ஹம்' படத்திலிருந்து அவரை ஞாபகம் இருக்கிறது. அந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன். முதல் நாள் அவருடன் நடிக்கும் போது அவரிடம் போய், 'உங்க கூட நடிப்பது ரொம்ப பெருமை சார், எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு', என்றேன். அவரோ, 'நீங்க ஏன் பதட்டமா இருக்கீங்க. எனக்குதான் நண்பர் மகள் கூட நடிக்கிறோமேன்னு ரொம்ப பதட்டமா இருக்கு,' என்றார்.
'லிங்கா' படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகில் அறிமுகமாவதை விட வேறு சிறந்த ஒன்று கிடையாது. ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் பெரிய நடிகர். ஆனாலும், மரியாதையுடனும், பணிவுடனும் தான் அனைவரிடமும் பழகுகிறார். ரசிகர்களிடமிருந்து அவருக்குக் கிடைக்கும் அன்பை மிகவும் மதிக்கிறார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்,” என பாராட்டித் தள்ளுகிறார் சோனாக்ஷி சின்ஹா..
Comments
Post a Comment