Actor Roshan Photos!!! மலையாள படமான த்ரிஷ்யத்தில் வில்லனாக நடித்தவர் ரோஷன் தமிழில் ஹீரோவானார்!!

13th of June 2014
சென்னை:மோகன்லால், மீனா நடித்த சூப்பர் ஹிட் மலையாள படமான த்ரிஷ்யத்தில் வில்லனாக நடித்தவர் ரோஷன். மோகன்லால் மகளை செல்போனில் படம் எடுத்து அவரை பலாத்தாரம் செய்ய முயற்சித்து கொலையாகும் கேரக்டரில் நடித்திருந்தார். த்ரிஷியத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளத்தில் வில்லனாக நடித்த ரோஷன் தமிழில் ஹீரோவாக நடிக்கிறார்.
 
கருணாஸ் நடித்த சந்தமாமா படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணன் இயக்கும் குபேரராசி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ரோஷன். காதல், மோதல், கலந்த காமெடி படம்.
மலையாளத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும் த்ரிஷ்யம்தான் எனக்கு அடையாளம் கொடுத்தது. தற்போது தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடிக்கிறேன். இந்த நேரத்தில்தான் எனக்கு தமிழ் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழில் நல்ல நடிகர் என்று பெயர் வாங்குவேன். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் வில்லனாகவும் நடிப்பேன்" என்கிறார் ரோஷன்.






Tags : Actor Roshan New Stills, Roshan Smart Pictures, Roshan Gym Body images, Roshan Cute Look Photos, Roshan Unseen Gallery, Roshan Smart Pics, Roshan Latest Photo Shoot.

Comments