23rd of June 2014
சென்னை:லட்சுமணன் இயக்கி வரும் 'ரோமியோ ஜுலியட்' படத்தில் 6 பேக் பயிற்சியாளராக ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி, ஹன்சிகா, கிருஷ்ண வம்சி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'ரோமியோ ஜுலியட்' தயாராகி வருகிறது. இப்படத்தினை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக இருந்த லட்சுமணன் இயக்கி வருகிறார். இமான் இசையமைத்து வரும் இப்படத்தினை நந்தகோபால் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சினிமா நடிகர்களுக்கு 6 பேக் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
சினிமா நடிகராகவே ஆர்யா நடிக்க இருக்கிறார். ஆர்யா மட்டுமன்றி பல சினிமா நடிகர்கள் இப்படத்தில் ஜெயம் ரவியோடு நடிக்க இருக்கிறார்கள். பல நடிகர்களிடம் இயக்குநர் லட்சுமணன் இது குறித்து பேசி வருகிறார். இதுவரை சுமார் 40% படப்பிடிப்பு முடிவுற்று வருகிறது.
இப்படத்திற்கு பிறகு ஆகஸ்ட் மாதம் முதல் சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஜெயம் ரவி திட்டமிட்டு இருக்கிறார்.
Comments
Post a Comment