ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் 5 ஹீரோக்கள் சிறப்பு தோற்றத்தில்!!!

30th of June 2014
சென்னை:பார்த்திபன் இயக்கி வரும், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். அதேபோல தற்போது ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் 5 ஹீரோக்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
 
கதைப்படி ஹீரோ ஜெயம்ரவி நடிகர்களுக்கு சிக்ஸ்பேக் வைக்க பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் மற்றும் நியூட்ரீஷியன். அவரிடம் சிக்ஸ் பேக் வைக்க வரும் நடிகர்களாக 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.
 
நிறைய ஹீரோக்களை அப்ரோச் பண்ணியிருக்கிறோம். இதுவரை ஆர்யா மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலர் ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்" என்கிறார் படத்தின் இயக்குனர் லட்சுமணன்.

Comments