கத்தி படத்தின் கதை கசிந்தது போன்று அஜீத்தின் 55வது படக்கதை கசிந்தது!!!!

8th of June 2014
சென்னை:கடந்த மாதம்தான் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதை கசிந்தது. வில்லனாக நடிக்கும் விஜய் 90 பேரை பிணய கைதிகளாக கடத்தி வைத்துக்கொள்ள, அவரிடமிருந்து ஹீரோ விஜய் அந்த பிணயக்கைதிகளை மீட்பது போன்று அப்படத்தின் கதை கசிந்தது.

அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதையும் இப்போது பேஸ்புக் மூலமாக கசிந்துள்ளது. அதாவது, கதைப்படி சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் த்ரிஷா கொல்லபபடுவாராம். அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக செய்தார்கள் என்பதைத்தான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜீத் புலனாய்வு செய்து கண்டு பிடிப்பாராம். இதில் அஜீத்துக்கு உதவி செய்வது போன்று அனுஷ்காவின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை சீக்ரெட்டாக வைத்திருந்த கெளதம்மேனன், மீடியாக்களைகூட சந்திக்காமல் இருந்தார். ஆனால், அவருடன் இருந்த யாரோ ஒருவர்தான் இந்த கதையை பேஸ்புக்கில் வெளியிட்டு விட்டாராம். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான கெளதம்மேனன் இப்போது அந்த நபரை தனது டீமில் இருந்தே வெளியேற்றி விட்டாராம் கெளதம்மேனன்!

Comments