தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும்போது 50 ஆயிரம்தான்; 50 லட்சத்தை அப்படியே ஒரு கோடியாக்கும் திட்டமும் வைத்துள்ளார் ஸ்ரீதிவ்யா!!!

17th of June 2014
சென்னை:
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும்போது 50 ஆயிரம்தான் ஸ்ரீதிவ்யாவின் சம்பளமாக இருந்தது. அதைகூட ஒரு நிறுவனம் முழுசாக கொடுக்கவில்லை. இப்படித்தான் அவரது கேரியர் தமிழில் தொடங்கியது. ஆனால், சிவகார்த்திகேயனுடன் நடித்த, ''வருத்தப்படாத வாலிபர் சங்கம்'' படம் ஓடியதையடுத்து, ராசியான நடிகையான ஸ்ரீதிவ்யா, தனது சம்பளத்தை 20 லட்சமாக்கினார்.
 
அதையடுத்து அதர்வாவுடன் ஈட்டி, சுசீந்திரனின, ஜீவா, ஜி.வி.பிரகாஷின் பென்சில் உள்பட சில படங்களில் கமிட்டான ஸ்ரீதிவ்யா படத்துக்குப்படம் 10 லட்சங்களை உயர்த்திக்கொண்டே வந்தவர், இப்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் டாணா படத்துக்கு 50 லட்சம் பேசியுள்ளார். இந்த படமும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்று மெகா ஹிட்டடித்தால், இந்த 50 லட்சத்தை அப்படியே ஒரு கோடியாக்கும் திட்டமும் வைத்துள்ளார் ஸ்ரீதிவ்யா.
 
ஆனால், திவ்யா நடித்து தமிழில் ஒரு படமே மட்டுமே வெளியாகியிருப்பதால், அவர் பத்து 10 முதல் 15 லட்சம் வரைதான் கேட்பார் என்று அவரை புக் பண்ண சென்ற சில படாதிபதிகள் அவர் 50 லட்சம் என்று சொன்னதும் வாயடைத்து விட்டார்களாம். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம், தனது புதிய படத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை அணுகியபோது, இப்போது 50 லட்சம் எனது சம்பளம் உங்களுக்காக வேண்டுமானால் ஒரு ஐந்து லட்சம் குறைத்துக்கொள்கிறேன் என்றாராம் நடிகை. அதுகூட உடனே கால்சீட் தரமாட்டேன். நீங்கள் எனக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றாராம்.

Comments