ஜூலை 5-ல் ‘அஞ்சான்’ டீஸர்!!!

25th of June 2014
சென்னை:ஒரு சில நாட்களுக்கு முன்பு ‘அஞ்சான்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும இப்படத்தில் சூர்யாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சமந்தா!
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து எப்போது டீஸரை பார்க்க முடியும்? என்ற கேள்வியோடு இருந்தார்கள் சூர்யாவின் ரசிகர்கள்! அவர்களது ஏக்கத்தை போக்கும் வகையில் ’அஞ்சான்’ பட டீஸர் ஜூலை 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது! இதை ‘அஞ்சான்’ பட இயக்குனர் லிங்குசாமி ட்விட்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆக, இன்னும் சில நாட்களின் அஞ்சானை காண தயாராக இருங்கள்!

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதி செய்திருக்கிறார். ’அஞ்சான்’ ஆக்ஸ்ட்-15 வெளியீடு என்பது எல்லோருக்கும் தெரியும்.
...
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அஞ்சான்’. 
இந்தப் படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
‘சிங்கம் 2’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிக்கும் படம், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், சூர்யாவுடன் முதன்முறையாக சமந்தா ஜோடி என இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பு படம் மீது கிளம்பியுள்ளது.
மேலும் சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறதாம். சுமார் 70 கோடி வரை படத்திற்கு செலவு செய்திருக்கிறார்களாம். அஞ்சான் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கியிருப்பதால் படத்தை  எப்படியும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ய வைத்துவிட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி உறுதியாக இருக்கிறாராம்.

Comments