நடிகையாவதற்கு 40 கிலோ எடை உடம்பும், சிவந்த நிறமும் கொஞ்சம் களையான முகமும் இருந்தால் போதும்: ஸ்பெஷல் ஸ்டோரி!!!
18th of June 2014.
சென்னை:ஒரு காலத்தில் சினிமாவில் நடிகையாக வேண்டுமென்றால் அவருக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும், ஆடத் தெரிந்திருக்க வேண்டும், தெளிவாக வசனம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சென்னை:ஒரு காலத்தில் சினிமாவில் நடிகையாக வேண்டுமென்றால் அவருக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும், ஆடத் தெரிந்திருக்க வேண்டும், தெளிவாக வசனம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பானுமதி, பத்மினி உள்ளிட்ட அந்தக் கால நடிகைகள் இவை எல்லாம்
தெரிந்தவர்களாக்தான் இருந்தார்கள். இந்தக் காலத்தில் நடிகையாவதற்கு 40 கிலோ
எடை உடம்பும், சிவந்த நிறமும் கொஞ்சம் களையான முகமும் இருந்தால் போதும்
நடிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.
இப்போது வந்துள்ள நவீன ஒலிப்பதிவு வசதியால் பேசத் தெரிந்த எவராலும் பாடகராக முடியும் என்கிற நிலை. கரகர குரலில் பாடினால் அதனை மென்மையாக்க முடியும். வேகமாக பாடினால் மெதுவாக்க முடியும், மெதுவாக பாடினால் வேகமாக்க முடியும். எத்தனை கேவலமாக பாடினாலும் அதை கேட்க தகுந்த பாடலாக்க முடியும். இது இன்றைய டெக்னாலஜி.
இந்த டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்டு முதலில் ஹீரோக்கள் பாட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து, இசை அமைப்பாளர்கள் வலிந்து வலிந்து அழைத்து ஹீரோக்களை பாட வைத்தார்கள். விக்ரம் முதல் விமல் வரை சினிமாவில் பாடாத நடிகர்கள் இல்லை.
இப்போது இந்த பாட்டு நோய் நடிகைகளையும் பிடித்துக் கொண்டது. ஆண்ட்ரியா ஆங்கில பாடல்களை பாடுகிறவர். அவரும் தமிழ் பாடல்களை பாட ஆரம்பித்தார். பாடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான். இவரைவிட அழகானவர் ஸ்ரேயா கோஷல் அவரை பலமுறை நடிக்க கூப்பிட்டும் "சாரி நான் பாடகிதான், நடிப்பு என் தொழில் அல்ல" என்று மறுத்தவர். அடுத்து ஸ்ருதி ஹாசன், அப்பா வழியில் பாட ஆரம்பித்தார். அடுத்து மலையாள நடிகை மம்தா மோகன்தாஸை தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடகியாக்கினார். அடுத்து ரம்யா நம்பீசன், இவரை பாண்டிய நாடு படத்தில் இமான் பாட வைத்தார்.
இவர்கள் பாடுவதைகூட ஒரு வகையில் நியாயப்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் அனைவரும் முறையாக இசை பயின்றவர்கள் அல்லது இசை பின்னணியில் இருந்து வந்தவர்கள். இவர்கள் வரிசையில் காதல் சந்தியாவை பாட அழைத்து வந்தார் பரத்வாஜ். பார்த்திபன், சினேகாவை தனது படத்தில் பாட வைத்துள்ளார். சிம்ரனையும் பாட அழைத்து வந்ததாகவும் சிம்ரன் பாட ஆரமபித்ததும் ரிக்கார்ட்டிங் ஸ்டூடியோவில் உள்ளவர்கள் பயந்து அலறியதாகவும் ஒரு தகவல் உண்டு. சமீபத்தில் லட்சுமி மேனனை ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திற்காக இமான் பாட வைத்துள்ளார். இவர்கள் யாருமே பாடகிகளும் கிடையாது. இசையை முறையாக பயின்றவர்களும் கிடையாது.
இன்றைக்கு இளம் இசை அமைப்பாளர்கள் நிறைய வருகிறார்கள். அவர்களுக்கு நடிகைகளுடன் நட்பு வைத்துக் கொள்வதில் நிறைய ஆர்வம் இருக்கிறது. அதற்காகவே அவர்களை அழைத்து பாட வைக்கிறார்கள். படத்தில் சான்ஸ் பிடிப்பதற்காக ஹீரோக்களை பாட வைக்கிறார்கள்" என்கிறார் முன்னணி இசை அமைப்பாளர் ஒருவர்.
தற்போது சினிமாவில் பாட முன்வந்திருக்கும் நடிகைகள் யாரும் தாங்கள் நடிக்கும் படத்திற்கு டப்பிங் பேசுவதில்லை. ஒரு மொழியில் பேசத் தெரியாதவர்களுக்கு எப்படி பாடத் தெரியும். இதில் இருக்கிறது நடிகைகள், பாடகிகளாகும் ரகசியம்.
பாடுவதற்கு நடிகைகள் படை எடுப்பதால் முறையாக சங்கீதம் கற்றுத் தேர்ந்து பாடகியானவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. சினிமாவில் பாடகியாவோம் என்கிற கனவோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் உயிரைக் கொடுத்து பாடிக் கொண்டிருக்கும் திறமையாளர்களின் கனவு சிதைக்கப்படுகிறது. சினிமா பல திறமையாளர்களின் கூட்டுத் தொகுப்பு. அவரவர் வேலையை அவரவர் செய்தால்தான் சிறப்பான சினிமா வெளிவரும்.
Comments
Post a Comment