தொடர்ந்து ஹீரோ வேடங்களில் நடித்து வரும் ஆர்யா இடையிடையே நட்புக்காக 3 படங்களில் கெஸ்ட் ரோலில்!!!

30th of June 2014
சென்னை:விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. அதையடுத்து தொடர்ந்து ஹீரோ வேடங்களில் நடித்து வரும் அவர், இடையிடையே நட்புக்காகவும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அந்த வகையில். மாயக்கண்ணாடி, சிவா மனசுல சக்தி, காதல் சொல்ல வந்தேன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
 
இந்த நிலையில், தற்போது மீகாமகன், யாட்சன் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம படத்திலும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இதுபற்றி அவரிடம் போனில் சொன்ன பார்த்திபன், எப்போது கால்சீட் கிடைக்கும் என்றாராம். அதற்கு, எப்ப வரணும்னு சொல்லுங்க அப்ப வந்திடுறேன் என்று சொன்ன ஆர்யா, அவர் சொன்ன தேதியில் ஸ்பாட்டில் ஆஜராகி விட்டாராம்.
 
தையடுத்து தற்போது விஷ்ணு நடிப்பில் ஜீவா என்ற கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையை இயக்கி வரும் சுசீந்திரன், தனது படத்தில் ஒரு ரோலில் சிறிய ரோலில் ஒரு சீனில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் தயக்கத்துடன் கேட்டாராம். அதற்கு, தயக்கம் வேண்டாம், தைரியமாக கேளுங்கள். ஒரு நாள்தானே சம்பளமே வாங்காமல் நடிததுத்தருகிறேன் எனறு சொல்லி விட்டாராம்.
 
அதேபோல், தனது நண்பரான ஜெயம்ரவி நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்திலும், சிக்ஸ்பேக் பயிற்சியாளராக நடிக்கும் ஜெயம்ரவியிடம், ஆலோசனை பெற வருபவராக நடிக்கிறாராம். கதைப்படி இதில் நடிகராகவே நடிக்கிறாராம் ஆர்யா. ஆக, இப்படி நட்புக்காக பல படங்களில நடித்து வருவதின் மூலம் பல டைரக்டர்களின் நட்பையும் சம்பாதித்து வருகிறார் ஆர்யா.

Comments