அமீர்கான் , காத்ரினா கைஃப், அமிதா பச்சன், உதய் சோப்ரா நடித்த தூம் 3. சீனாவில் ரிலீஸ் ஆகும் முதல் இந்தியப் படம்!!!



 
30th of June 2014
சென்னை:வெளியான முதல் வாரத்திலேயே 61 கோடி வசூலை குவித்து சாதனை படைத்த இந்தி படம் தூம் 3. இப்படம் தற்போது சீனாவில் ரிலீஸ் ஆகிறது.

அமீர்கான் , காத்ரினா கைஃப், அமிதா பச்சன், உதய் சோப்ரா நடித்த இத்திரைப்படத்தின் இயக்குநர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா

இதன் முந்தைய பாகங்களான தூம் , தூம் 2 ஆகிய இரு இந்தியாவின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது..

அமீர்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள தூம்- 3 கடந்த டிசம்பர் 2013 இல் வெளியாகி வசூல் மழையைக் கொட்டியது.

கமர்ஷியல் ஹிட்டடித்த இத்திரைப்படமே முதன் முறையாக துருக்கியின் டாப் 10 படங்களின் வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியப் படம். இப்போது இப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது .சீனாவில் வெளியாக இருக்கும் முதல் இந்தியப் படமும் தூம் 3 தான் என்பது பெருமைக்குரிய தகவல்.

Comments