டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமான அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினி!!!

18th of June 2014.
சென்னை:டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர் அனிருத். லதா ரஜினியின் உறவினர் என்பதால் தான் அனிருத்துக்கு அந்த வாய்ப்பு எளிதாக கிடைத்தது. அதை அவரும் அற்புதமாக பயன்படுத்திக்கொண்டார். ஒய்திஸ் கொலவெறி... என்ற பாடல் கடல் கடந்தும் பல நாடுகளில் ஒலித்தது.
 
அதனால், அப்போது அனிருத்தை அழைத்து வாழ்த்தினார் ரஜினி. அதனால் அவரது வாழ்த்து கொடுத்து உற்சாகத்தோடு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் அனிருத், இப்போது விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைக்கும் அளவுக்கு குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு நிற்கிறார்.

இந்தநிலையில் இதேவேகத்தில் ரஜினி படத்துக்கும் இசையமைத்து விட வேண்டும் என்று துடிக்கிறார் அனிருத். ஆனால், சமீபகாலமாக ரஜினி படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இருப்பினும், இதுபற்றி அனிருத், ரஜினியிடம் கேட்டபோது, பார்க்கலாம் என்று முதலில் சொன்னவர். அனிருத் தொடர்ந்து கொடுத்த டார்ச்சரினால், லிங்காவிற்கு பிறகு தான் நடிக்கும் படத்தில் அவருக்கு சான்ஸ் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம்.
 
ஆனால் இந்த வாய்ப்பை உறவினர் என்பதற்காக கொடுக்கவில்லையாம். அனிருத் இசையமைத்த படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை ரஜினியை கவர்ந்துள்ளதாம். இத்தனை சின்ன வயதில் அனிருத்துக்கு இவ்வளவு திறமையா என்று வியந்துதான் வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஜினி.

Comments