சிங்கம் 2 ஹிட்டிற்கு பிறகு சூர்யா நடிக்கும் அஞ்சான் படப்பிடிப்பு ஓவர்: விரைவில் டீஸர்!!!

24th of June 2014
சென்னை:சிங்கம் 2 ஹிட்டிற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அஞ்சான்.
இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். லிங்குசாமியின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 99 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில், ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் மீதி இருந்தது. சமீபத்தில் அந்த காட்சிகளை மும்பையிலுள்ள வாசை துறைமுகத்தில் படம் பிடித்தார்கள். அத்துடன் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக தனஞ்செயன் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
படத்தின் டீஸர் வெளியீடு குறித்து விரைவில் லிங்குசாமி அறிவிப்பார் என்றும் அதில் தெரிவித்துள்ளார். படம் ஆக்ஸ்ட்-15 வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. ரஜினிக்கு ஒரு பாட்ஷா படம் அமைந்தது போல, சூர்யாவுக்கு அஞ்சான் படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மும்பையில் தொடங்கிய அஞ்சான் படப்பிடிப்பு சமந்தாவின் தோல் அலர்ஜி மற்றும் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம் ஆகிய காரணங்களால் இரண்டு முறை தடைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments