29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த சரபம் இயக்குனர்!

20th of June 2014
சென்னை:பீட்சா’, ‘தெகிடி’ வரிசையில் சிவி.குமார் தயாரித்திருக்கும மற்றுமோர் க்ரைம் த்ரில்லர் படம் தான் ‘சரபம்’.
பிரம்மன் படத்தில் சசிகுமாரின் நண்பராக வரும் நவீன் சந்திரா இதில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சலோனி நடித்திருக்கிறார். இவர்களோடு ஆடுகளம் நரேன் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். அருண்மோகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனரும் காமெடி நடிகருமான அனுமோகனின் மகன்.
படம் ஆரம்பிக்கும் போதே படப்பிடிப்பை 30 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனருக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார். அதனால இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி ஒரு நாள் முன்னதாகவே அதாவது 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்துவிட்டாராம் இயக்குனர் அருண்மோகன்.
 
இது குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் கேள்வி எழுப்யிபோது. “ஒரு படத்திற்கு பிஸினஸ் வேல்யூ எவ்வளவு என்பதைப் பொறுத்துதான் படப்பிடிப்பு நாட்களை கணக்கிடுகிறோம். மேலும் இந்தப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட் கிடைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அதனால் வரிவிலக்கும் கிடைக்காது. அந்த இழப்பையெல்லாம் இந்த ஷூட்டிங் நாட்களை குறைப்பதன் மூலம் தான் ஈடுகட்ட முடியும்” என்கிறார்.

Comments