25th of June 2014
சென்னை:உலகமெங்கும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து உள்ளவை தான்
ட்ரான்ஸ்பார்மர்ஸ் வரிசை படங்கள். ரோபாட்டுகள் நிமிடத்தில் உருமாறி வேறு
வடிவம் அடையும் கிராபிக்ஸ்களினால் புகழ் பெற்ற ட்ரான்ஸ்பார்மர்ஸ் படத்தின்
நான்காம் பாகமான Age of Extinction இந்த மாதம் 27ஆம் தேதி உலகெங்கும் வெளி
வர உள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில்
இந்தப்படம் வெளியாகிறது.
சர்வதேச அரங்கில் எல்லோரையும் பிரமிக்க வைத்த பிரபல இயக்குனர் ஸ்டீவென்
ஸ்பீல்பெர்க் நிர்வாக தயாரிப்பில், மைக்கேல் பே இயக்கத்தில் வெளிவரும் இந்த
படத்தில் ராட்சத யந்திரங்கள் இடையே, சில பிரபல மனித முகங்களும் உண்டு.
சிகாகோவின் ஆக்கிரமிப்புக்கு நான்கு வருடங்களுக்கு பின்னர் துவங்கும் இந்த படம் தொழில் நுட்பத்திலும், பிரம்மாண்டத்திலும் இதுவரை கண்டிராத படம் என சர்வதேச திரை உலகமே எதிர்பார்த்து இருக்கும் ட்ரான்ஸ்பார்மர்ஸ் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் உக்கிர போரின் விளைவாக பிரபஞ்சம் அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை பற்றியது

Comments
Post a Comment