25 ஹிட் பாடல் வரிகளை மிக்ஸ் பண்ணிய கானா பாலா!!!

27th of June 2014
சென்னை:முதல்ல பாடலாசிரியர்கள் எழுதி தருவதை பாடிவிட்டுப்போன கானா பாலா இப்போது அவரே சொந்தமாகவும் பாடல் எழுத ஆரம்பித்து அவரே பாடியும் வருகிறார். அவையும் சூப்பர் ஹிட் ஆகின்றன. ‘மெட்ராஸ்’ படத்தில் ‘காகிதக்கப்பல்’ பாடலை கார்த்திக்காக எழுதி பாடியிருக்கிறார்.
 
அதேபோல சந்தானம், சேது நடித்துள்ள ‘வாலிப ராஜா’ படத்தில் ‘நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியல’ அப்படிங்கிற பாடலை எழுதி பாடியிருக்காரு. இந்தப்பாட்டுல என்ன ஸ்பெஷல்னா சமீபத்துல ஹிட்டான 25 பாடல்கள்ல இருந்து முதல் வரிகளை எடுத்து அதுல சில வார்த்தைகள சேர்த்து அதையே ஒரு பாட்டா எழுதி பாடியும் கொடுத்திருக்காரு.
 
நேற்று நடந்த வாலிபராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கானா பாலா, “எனக்கு வழக்கமா ஒரு பாட்டு எழுதுறதுக்கு பத்து நாள் வேணும். ஆனா இப்படி ஒரு பாட்டு வேணும்னு டைரக்டர் சொன்னதும் ஒரு மணி நேரத்துல எழுதிக்கொடுத்துட்டு போயிட்டேன். அதுல கொஞ்சம் தான் கரெக்ஷன் இருந்துச்சு. அதையும் மியூசிக் டைரக்டர் சரி பண்ணிட்டாரு. இனிமே இதேமாதிரி வேலை தந்தா எனக்கும் வேலை ஈசியா இருக்கும்.. பாக்கெட்டும் நிறையும்” என்றார்.

Comments