கத்தி 'முதல் தோற்றம் விஜய் பிறந்த நாளையொட்டி வெளியானது!!! இளைய தளபதி விஜய்க்கு இன்று (ஜூன் 22) 40வது பிறந்த நாள்!!!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படமான கத்தியின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் தோற்ற போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.
நாளை ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதாலேயே இன்று மாலையே இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
விஜய், சமந்தா நடிக்க, லைக்கா புரொடக்ஷன்ஸும் ஐங்கரனும் இணைந்து தயாரிக்கும் படம் கத்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடக்கின்றன.
இந்த நிலையில் நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஜய்யைச் சிறப்பிக்கும் வகையில், இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர், முன்னோட்டக் காட்சிகளை இன்று மாலை வெளியிட்டனர்.
இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பே, வெளியூர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன.
வரும் தீபாவளிக்கு வெளியாகிறது கத்தி!
இளைய தளபதி விஜய்க்கு இன்று (ஜூன் 22) 40வது பிறந்த நாள். இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தி...
என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். வழக்கமாக நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைய தினத்தை ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் பகுதியில் என் பிறந்த நாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணியுங்கள். கண்தானம், ரத்ததானம் செய்யுங்கள், பெண்களுக்கு தையல் மிஷின், மாணவர்களுக்கு லேப்டாப், ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
உங்களின் இந்த சேவைதான் எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கும். உங்களின் இந்த தொண்டு மேலும் பல மடங்கு உயர வேண்டும். அதற்கு நீங்கள் பொருளாதார நிலையில் உயர வேண்டும். அப்போதுதான் இந்த சேவைகள் சாத்தியமாகும்.
நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் உறுதியோடும், உண்மையோடும் உழையுங்கள். கண்டிப்பாக வெற்றியை பெறுவீர்கள். உங்களின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் விலையுண்டு, நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற உணர்வை பெறுவேன். உண்மையோடு உழையுங்கள், உயர்ந்த இடத்தை பிடியுங்கள். இதுவே நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் எனது பிறந்த நாள் பரிசாகும்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்

Comments
Post a Comment