16th of June 2014
2014-ம் ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது. இன்றைய காதலர்கள் சந்திக்கும் நல்லது, கெட்டது பற்றி அலசும் படமாக உருவாகி வருகிறது ‘காதல் 2014’. இப்படத்தை சுகந்தன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சேரனிடம் ‘ஆட்டோகிராப்’ படம் வரை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இப்படத்தில் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’, ‘மாத்தியோசி’ ஆகிய படங்களில் நடித்த ஹரீஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான மணிகண்டன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

மேலும், அப்புக்குட்டி, பசங்க சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு பைசல் இசையமைக்கிறார். ரித்தீஷ் கண்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சரவணா பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Comments
Post a Comment