நடிகை குஷ்பு வழக்கு விசாரணை : ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 5th of June 2014
சென்னை:நடிகை குஷ்பு தொடர்பான வழக்கு விசாரணை, வரும் ஜூலை மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை அடுத்த இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்த பாமக வக்கீல் முருகன் என்பவர் குஷ்பு மீது, மேட்டூர் குற்றவியல் நடுவர் எண் 2ல் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இவ்வழக்கிற்காக குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பும்போது, அவர் கார் மீது தக்காளி மற்றும் அழுகிய முட்டைகள் வீசப்பட்டது.
 
இச்சம்பவம் தொடர்பாக அப்போதைய மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அறிவழகன் உட்பட 41 பேர் மீது மேட்டூர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments