ரசிகர் மன்றங்களே வேண்டாம் விட்டு விடுங்கள் என்று அஜீத் ஓடி ஒழிந்தாலும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை: மலேசிய ரசிகர்கள்!!! (18 pics)

19th of June 2014
சென்னை:எனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் விட்டு விடுங்கள் என்று அஜீத் ஓடி ஒழிந்தாலும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு, விஜய் ரசிகர்களுடன் அவ்வப்போது பலப்பரீட்சையும் நடத்துகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியாவிலும் அஜீத்துக்கு ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள்.
 
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் 55வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது, தினம் தினம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பை முற்றுகையிட்டனர். இதனால், படப்பிடிப்புக்கே இடையூறு ஏற்பட்டு சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்திய கெளதம்மேனன் பின்னர், ரசிகர் நடமாட்டம் இல்லாத பகுதிகளாகப்பார்த்து படமாக்கினார்.

ஆனால் தற்போது சென்னைவாசத்தை முடித்து விட்டு அஜீத்துடன் மலேசியா பறந்துள்ளது கெளதம்மேனன் யூனிட், அங்குதான் அஜீத்-அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்படுகிறதாம். தனது படங்களில் எப்போதுமே ரொமான்ஸ் காட்சிகளை அதிகமாக இடம்பெறச்செய்யும் கெளதம், இந்த படத்திலும் சற்று தூக்கலாகவே காட்சிகளை வைத்திருக்கிறாராம். அந்த வகையில், இதுவரை அஜீத் நடித்த படங்களில் இந்த படத்தில் ஆக்சன் மட்டுமின்றி ரொமான்சும் ஜாஸ்தியாக இருக்குமாம்.
 
மேலும், அஜீத், படப்பிடிப்புக்காக மலேசியா வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், மலேசியாவில் வாழும் தமிழ் ரசிகர்கள் அஜீத்தை சந்தித்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்களாம். அதுமட்டுமின்றி, மலேசியா பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் அஜீத் யூனிட்டை நேரில் சென்று வரவேற்றார்களாம். ஆக, மட்டற்ற மகிழ்ச்சியுடன் மலேசியாவில் முகாமிட்டுள்ளார் அஜீத்.

Comments