சூர்யாவின் அஞ்சான் படம் வெளியாகும் ஆகஸ்ட் 15-ம் தேதி சிம்பு நடித்த வாலு படமும் மோதுகிறது!!!

16th of June 2014
சென்னை:சென்னை:
சூர்யாவின் அஞ்சான் படம் வெளியாகும் ஆகஸ்ட் 15-ம் தேதி சிம்பு நடித்த வாலு படமும் வெளியாகும் என அறிவித்துள்ளார்

அந்தப் படத்தின் இயக்குநர்.சூர்யா, சமந்தா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரவென நடந்து சமீபத்தில் முழுமை பெற்றது

ஆக 15 இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவேகத்தில் நடக்கிறது. எப்படியும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார் லிங்குசாமி. இதனை அவர் ஏற்கெனவே அறிவித்தும்விட்டார்

வாலு இதற்கிடையில், நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வாலு படத்தின் ஷூட்டிங் முழுமை பெற்று, போஸ்ட் புரொடக்ஷன் பணகளிலும் நிறைவுக் கட்டத்துக்கு வந்துள்ளதாம்.

இயக்குநர் பேட்டி இதைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் விஜய் அளித்த பேட்டியில், வாலு படத்தை ஆகஸ்டச் 15-ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிடப் போகிறோம் என்று கூறியிருந்தார். சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள இந்தப் படம் நீண்ட காலம் தயாரிப்பிலிருந்தது.

கடந்த முறை... சிம்பு கடைசியாக நடித்த படம் போடா போடி. இந்தப் படத்தை விஜய்யின் துப்பாக்கி படத்துடன் வெளியிட்டார். படத்தின் ரிசல்ட் கோடம்பாக்கம் அறிந்ததே!

Comments