3rd of June 2014
சென்னை:பாலாவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஆர்.கண்ணன் என்பவர் இயக்கியுள்ள ‘நான்தான் பாலா’ என்ற படத்தில் தனது வழக்கமான காமெடி நடிப்பிலிருந்து விலகி முதன்முதலாக சீரியஸான ரோலில் நடித்துள்ளார் விவேக். ஸ்வேதா கதாநாயகியாக நடிக்க, மயில்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப்படம் ஒரு பிராமணருக்கும் ஒரு முரடனுக்கும் உள்ள உறவைப்பற்றிய கதை. இதில் பிரமாணர் கேரக்டரில் தான் நடிக்கிறார் விவேக். பரிசோதனை முயற்சியாக காமெடியில் இருந்து சீரியஸிற்கு மாறியிருக்கும் விவேக் நடித்துள்ள இந்தப்படம் வரும் ஜூன்-13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Comments
Post a Comment