பார்த்திபன் இயக்கி வரும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ': ஒரே பாட்டில் 10 ஹீரோக்கள் ஆடுகிறார்கள்!!!
29th of June 2014
சென்னை:பார்த்திபன் இயக்கி வரும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள்.

ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், அமலாபால், டாப்ஸி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்போது இதன் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பாடல் காட்சியை எடுத்து வருகிறார் பார்த்திபன். "சோகம் போதும் நிப்பாட்டிடு, சொர்க்கம் போக டிக்கெட் எடு..." என தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் இருக்குமாம்.
மதன் கார்க்கி எழுதியுள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். ஹரிசரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, நகுல் பாடியிருக்கிறார்கள்.
இந்த பாட்டில் முன்னணி நட்சத்திரங்களையெல்லாம் ஆட வைத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பாட்டுக்கு நடனம் அமைப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
பத்து ஹீரோக்களை ஆட வைப்பது பார்த்திபனின் திட்டம்.
Comments
Post a Comment