அடுத்த படத்துக்கு அட்வான்ஸாக 10 ரூபாய் கொடுத்தாரா இயக்குனர் என நக்கலடித்து இருக்கிறார் சார்மி.‘ஆஹா எத்தனை அழகு, ‘லாடம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் சார்மி. டோலிவுட்டில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ‘மந்த்ரா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் படங்களின் விவரம் மற்றும் ஷூட்டிங்கில் நடக்கும் சுவையான அனுபவங்களை தனது இணைய தள பக்கத்தில் வெளியிடும் சார்மி அதை படத்துக்கான பப்ளிசிட்டியாகவும் பயன்படுத்திக்கொள்கிறார். இதனால் பட இயக்குனர்கள் அவரிடம் நிறைய தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.சமீபத்தில் ஒரு கையில் பத்து ரூபாய் நோட்டும் மறுகையில் ஐபோன் வைத்தபடியும் போட்டோவை வெளியிட்ட சார்மி அதற்கு விளக்கம் அளிக்கும்போது,‘
மந்த்ரா 2 பட இயக்குனர் எனக்கு இதை கொடுத்தார். இது நான் நன்றாக நடித்ததற்காக கொடுத்தாரா? அல்லது அடுத்த படத்துக்கான டோக்கன் அட்வான்ஸாக கொடுத்தாரா? என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார் சார்மி. படத்தை பார்க்கும்போது ஒரு கையில் 10 ரூபாய் நோட்டு இருந்தாலும் இன்னொரு கையில் ஐபோன் வைத்திருக்கிறார். இதில் இயக்குனர் கொடுத்தது ரூபாயா அல்லது ஐ போனா அல்லது இரண்டுமா என்பதை சார்மி குறிப்பிட தவறிவிட்டார்.
Comments
Post a Comment