100 கோடியைத் தாண்டிய ‘துப்பாக்கி’ ரீமேக் வசூல்!!!

25th of June 2014
சென்னை:ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க இந்தியில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் ரீமேக்கான ‘ஹாலிடே’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
 
இந்த ஆண்டில் இதுவரையில் இந்தியில் வெளிவந்த படங்களில் மூன்று படங்கள்தான் இந்த சாதனையைப் புரிந்துள்ளன. சல்மான் கான் நடித்த ‘ஜெய் ஹோ’, அர்ஜுன் கபூர், அலியா பட் நடித்த ’2 ஸ்டேட்ஸ் மற்றும் ‘ஹாலிடே’ ஆகிய படங்கள்தான் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளன.
 
இந்த மூன்று படங்களில் ‘ஜெய் ஹோ’ படம் இதுவரை 109 கோடி ரூபாய் வசூல் புரிந்துள்ளதாம். கடந்த 6ம் தேதி வெளிவந்த ‘ஹாலிடே’ திரைப்படம் கடந்த வார முடிவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இந்த வார முடிவில் ‘ஜெய் ஹோ’ படம் வசூலித்த 109 கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
 
இதன் மூலம் இந்த 2014ம் ஆண்டின்  இதுவரையிலான அதிகபட்ச வசூலை அள்ளிய படமாக ‘ஹாலிடே’ இருக்கும். அடுத்து வேறு ஏதாவது படம் வந்து இந்த சாதனையை முறியடிக்குமா அல்லது ‘ஹாலிடே’ திரைப்படம் நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது இனி வரும் படங்களைப் பொறுத்தே முடிவாகும்.

Comments