11th of June 2014
சென்னை: தன்னிடம் வேலை பார்க்கும் சமையல்காரர், தோட்டக்காரர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சொந்த செலவில் வீடு கட்டி தந்துள்ளார் நடிகர் அஜீத். மலேசியா ஷூட்டிங்கிலிருந்து அவர் திரும்பியதும் இதற்கான திறப்பு விழா நடக்கிறது.அஜீத்குமார் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், சமையல்காரர், தோடக்காரர் உள்ளிட்டோருக்கு சொந்தமாக வீடு கட்டித்தருவதாக கூறி இருந்தார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் அரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் 10 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.
இதற்கான பூமி பூஜையில் அஜீத் அவரது மனைவி ஷாலினி கலந்துகொண்டனர். தற்போது வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருக்கிறார் அஜீத். ஷூட்டிங் முடிந்து திரும்பி வந்ததும் வீடுகள் திறப்பு விழா நடக்கிறது. முன்னதாக வீட்டு சாவிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அஜீத் வீடு கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. ஊழியர்கள் தனது வீட்டுக்கு எளிதில் வந்துபோகும் வகையில் அவர்களுக்கு குறைந்த அளவு தூரத்திற்குள்ளேயே புதிய வீடுகள் கட்டித் தந்திருக்கிறார் அஜீத்.
Comments
Post a Comment