10 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த நந்திதா, அடுத்து நடிக்கயிருக்கும் படங்களுக்கு 15 லட்சம் தந்தால்தான் நடிப்பேன்: டிமாண்ட்!!!

9th of June 2014
சென்னை::குத்து ரம்யாவைத் தொடர்ந்து கன்னடத்தில் இருந்து தமிழ் சினிமாவில் கோலேச்சியிருக்கும் இன்னொரு நடிகை அட்டகத்தி நந்திதா. முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் கோடம்பாக்கத்தின் ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் இவர். சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விஷ்ணு என்று வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களாக நடித்து வரும் நந்திதா, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடிப்பது வரை கொடுத்ததை வாங்கிக்கொண்டு நடித்தார்.

ஆனால், இப்போது விஜயசேதுபதிக்கு ஜோடியாக இடம் பொருள் ஏவல், விஷ்ணுவுக்கு ஜோடியாக முண்டாசுப்பட்டி உள்பட 4 படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த படங்களில் 10 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த நந்திதா, அடுத்து நடிக்கயிருக்கும் படங்களுக்கு 15 லட்சம் தந்தால்தான் நடிப்பேன் என்று டிமாண்ட் வைத்து வருகிறார்.

அந்த வகையில், வினய்க்கு ஜோடியாக காக்காய்க்கு சோறு என்ற பெயரில் நடிக்கும் படத்துக்கு 15 லட்சம் ரவுண்டாக பேசியிருக்கிறார் நந்திதா. சின்ன கம்பெனி கொஞ்சம் குறைச்சிக்கக்கூடாதா என்று கேட்டதற்கு, சின்ன கம்பெனிக்கு பெரிய நடிகை தேவையில்லையே. குறைச்சலான சம்பளத்துல நடிகை வேணும்னா, வேற யாராவது சின்ன நடிகைங்களை புக் பண்ணி வேண்டியதானே என்றாராம் நந்திதா. ஆக, தற்போது தான் வளர்ந்து விட்ட முன்னணி நடிகை என்கிற மனநிலை அவரிடம் வந்து விட்டது என்பதை நந்திதாவின் இந்த பேச்சு உணர்த்துகிறது.

Comments