சென்னை:பெங்களூர் டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கவர்ச்சி நடிகை தமிழகத்தில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.பல்வேறு கன்னட படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை நயனா கிருஷ்ணா. பட வாய்ப்பு பறிபோன நிலையில் இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆண்களுடன் நெருக்கமாக இருக¢கும் வீடியோவை தனது நண்பர்கள் மூலம் படமாக்குவாராம். அதை வைத்து பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளார். இதேபோல் பெங்களூரை சேர்ந்த டாக்டர் ஒருவர் நயனாவிடம் சிக்கியுள்ளார். நயனாவுடன் நெருக்கமாக இருக்கும் சிடியை தர வேண்டுமென்றால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று நயனாவும் அவரது ஆண் நண்பர்கள் சிலரும் அந்த டாக்டரை மிரட்டியுள்ளனர
இது தொடர்பாக பெங்களூர் போலீசில் டாக்டர் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, முதல் கட்டமாக ரூ.1 லட்சம் தருவதாக அந்த கும்பலிடம் டாக்டர் கூறியுள்ளார். அந்த பணத்தை வாங்க வந்தபோது, 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பிவிட்டார். தப்பிய நபரையும் நயனாவையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நயனா பதுங்கி இருப்பதாக பெங்களூர் போலீசாருக¢கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இங்கு வந்து சென்னை போலீசாரின் உதவியுடன் நயனாவை பிடிக்க பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment