Yaan Press Meet Stills!!! யான் படத்தின் வெளியீட்டுவிழா: தொழிலை மதிக்க வேண்டும்! யான் படாதிபதியிடம் கூறிய மாஜி நடிகை ராதா!!!
14th of May 2014
சென்னை::Tags : Yaan Media Meet Stills, Yaan Press Meet Gallery Pics, Yaan Press Meet images, Yaan Team Meet Media Peoples Pictures, Yaan Press Meet Event Photos.
14th of May 2014
சென்னை::ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் யான்.
ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ராதாவின் மகள் துளசி நடிக்கிறார்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன்
தயாரிக்கும் இந்தப் படம் கடந்த வருடம் துவங்கப்பட்டது. யான் படம்
துவங்கப்பட்டது முதல் இப்படம் பற்றிய செய்திகள் தொடர்ந்து அனைத்து
ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. அவை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களிலும்
வெளியிடப்பட்டு, யான் படத்தை மக்கள் மத்தியில் பரிச்சயப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்,
யான் படத்தின் இசைவெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று
நடைபெற்றது. அந்த விழாவுக்கு மீடியாக்களுக்கு அழைப்பு இல்லை.
ஏன்?
மீடியாக்கள் வேண்டாம் என் ரசிகர்கள் முன்னிலையில் யான் ஆடியோவை
வெளியிட்டால் போதும் என்று அப்படத்தின் ஹீரோ ஜீவா தயாரிப்பாளர்களிடம்
கூறினாராம்.
ஹீரோவே இப்படி சொன்ன பிறகு அவர்
பேச்சை தயாரிப்பாளர்களால் தட்ட முடியுமா? எனவே மீடியாக்களை அழைக்கும்
திட்டத்தை கைவிட்டுவிட்டு ஜீவாவின் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டு யான்
படத்தின் இசைவெளியீடு நடைபெற்றிருக்கிறது.
தொழிலை மதிக்க வேண்டும்! யான் படாதிபதியிடம் கூறிய மாஜி நடிகை ராதா!!
மாஜி நடிகை ராதா தனது மகள்கள்
கார்த்திகாவை கோ படத்தில் அறிமுகம் செய்தவர், இரண்டாவது மகள் துளசியை
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். இதில் துளசி நடித்த
படம் தோல்வியடைந்ததால், அடுத்தபடியாக அவருக்கு எதிர்பார்த்தபடி
படவாய்ப்பில்லை. அதனால் மீண்டும் மகளுடன் சொந்த ஊருக்கே கிளம்பி விட்ட
ராதாவை பின்னர் யான் படத்தில் ஜீவாவுடன் நடிப்பதற்காக அப்பட டைரக்டர்
ரவி.கே.சந்திரன் தொடர்பு கொண்டதும், விழுந்தடித்து ஓடிவந்து அப்படத்தில்
கமிட்டானார்.
அதோடு, அந்த படத்தில் துளசி
ராணுவ அதிகாரியின் மகள் என்பதால், அவரது உடலைக்குறைக்கும் முயற்சிகள்
எதுவும் இல்லை என்பதால், அதே உடல்கட்டோடு யான் படத்தில் நடித்தார் துளசி.
ஆனால், ஆறு மாதத்தில் முடிய வேண்டிய படம் ஒரு வருடமாகி விட்டது.
இருப்பினும், அந்த படத்தில் நடித்துக்கொண்டே படிப்பையும் தொடர்ந்து
வந்தார் துளசி.
இந்த நிலையில், தற்போது யான்
படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முன்தினம்
அப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தது. முன்னதாக, இந்த விழாவில
கலந்து கொள்ள துளசியை யாரும் அழைக்கவில்லையாம். ஆனால், ஆடியோ வெளியிடுகிற
சேதியறிந்த ராதா, உடனடியாக அப்பட தயாரிப்பாளரான எல்ரெட் குமாரை தொடர்பு
கொண்டு, துளசியை எதற்காக அழைக்கவில்லை? என்று கேட்டாராம்.
அதற்கு,
அவருக்கு பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சினிமா
விழாவுக்கு அழைத்தால் படிப்பு கெட்டுப்போகுமே என்பதால்தான் அழைக்கவில்லை
என்றாராம். அதைக்கேட்ட ராதாவோ, என்னைப் பொறுத்தவரை சினிமாவுக்குத்தான்
முதலிடம் கொடுப்பேன். தொழிலை நாம் மதிக்க வேண்டும் அப்போது தான் தொழில்
நம்மை மதிக்கும். அதனால், நான் துளசியுடன் கண்டிப்பாக ஆடியோ விழாவில்
கலந்து கொள்வேன் என்று கூறி சென்னைக்கு வந்து யான் படத்தின் ஆடியோ
விழாவில் கலந்து கொண்டார்.
அதையடுத்து நேற்று நடந்த அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டார் துளசி..
Comments
Post a Comment