Vallavanukku Pullum Ayutham Success Meet Photos:-ஹீரோவானதும் சம்பளம் அதிகம் கேட்கிறேனா? சந்தானம் பதில்!!!

22nd of May 2014
சென்னை::(Tags : Vallavanukku Pullum Ayutham Media Success Meet Stills, Vallavanukku Pullum Ayutham Success Meet Gallery Pics, Vallavanukku Pullum Ayutham Success Meet images, Vallavanukku Pullum Ayutham Team Meet Media Peoples Pictures, Vallavanukku Pullum Ayutham Success Meet Event Photos


 

 
 


ஹீரோ ஆனதும் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறீர்களாமே என்றதற்கு பதில் அளித்தார் சந்தானம்.சந்தானம் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இப்படம் குறித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
 
இப்படத்தின் வெற்றி எனக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் எனக்கேற்ற விதத்தில் பொருத்தமான காமெடி வேடங்கள் வந்தால் ஏற்று நடிப்பேன். அடுத்து ரஜினியின் ‘லிங்கா‘ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறேன். நான் அவரது ரசிகன். ஏற்கனவே எந்திரன் படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன். கமல் படத்திலும் நடிக்க ஆசை இருக்கிறது. ‘ஹீரோ ஆனதும் சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா? என்கிறார்கள். அப்படி இல்லை. எப்போதும்போல் எவ்வளவு நாள் கால்ஷீட் கேட்கிறார்களோ அதற்கு ஏற்பத்தான் சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேன்.
 
அடுத்து நான் ஹீரோவாக நடிக்கும் படத்தை முருகானந்த் டைரக்டு செய்ய உள்ளார். ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ‘வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னா இதிலும் ஹீரோயின். இதுவரை காமெடி படங்களில் என்னை பார்த்த எனது அம்மா, ஹீரோ வேடத்தில் நடித்து அடி வாங்குவதை கண்டு அழுதுவிட்டார். நான் அடிவாங்கும் காட்சியில் அவர் 2 முறை எழுந்து வெளியே சென்றுவிட்டார். 3வது முறைதான் முழு படத்தையும் பார்த்தார் என்றார்....

Comments