9th of May 2014
சென்னை::வரும் 16ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதால் அரசியல்வாதிகள் டென்ஷனில் இருப்பார்கள்.. ஒகே.. ஆனால் நம்ம சந்தானமும் நகத்தை கடித்துக்கொண்டு ஒருவித டென்ஷனில் இருக்கிறாரே என்ன காரணம்..? இன்னும் சில தினங்களில் அவர் முதன்முதல் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் ரிலீஸாகிறது.
முதன்முதலில் ஹீரோவாக நடித்திருப்பதால் டென்ஷன் இருக்காதா பின்னே..? ஆனால் ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டடித்த ராஜமௌலியின் கதை, ஸ்ரீநாத்தின் டைரக்ஷன், கூடவே தன்னுடைய ட்ரேட்மார்க் பஞ்ச் டயலாக்குகள் என சாதகமான விஷயங்கள் இந்தப்படத்தில் சந்தானத்திற்கு நிறையவே இருக்கின்றன.
இந்தப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘U’சர்டிஃபிகேட் வழங்கியுள்ளனர்...
Comments
Post a Comment