23rd of May 2014
சென்னை::Tags : Thoppi New Movie Photos, Thoppi Movie Gallery, Thoppi Movie Pictures, Thoppi Film images, Thoppi Movie Hot Stills, Thoppi New Tamil Movie Pics..
பிரபு சாலமன் இயக்கிய படம் மைனா. கம்பம் மலை உச்சியில் உள்ள குரங்கிணி
பகுதியில் இப்படம் படமாக்கப்பட்டது. அதே பகுதியில் உருவாகி இருக்கிறது
தொப்பி என்ற படம். மைனாவுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார்தான் இதற்கும்
ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். மதுரை சம்பவம்,
சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கி உள்ளார்.
ராம்பிரசாத் சுந்தர் என்பவர் இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும்
வைரமுத்து எழுதியுள்ளார். மிககுறுகிய காலத்தில் படத்தை எடுத்து
முடித்துவிட்டனர்.
"அதிக வெளி உலக தொடர்பில்லாத
மலைக்கிராமத்தில் பிறந்த இளைஞனுக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது
லட்சியம். ஆனால் அதற்கு அவனது பிறப்பும், குற்ற பின்னணியும் தடையாக
இருக்கிறது. அதனை சமாளித்து தன் லட்சியத்தை அடைந்தானா என்பதுதான் படத்தின்
கதை. மலைப்பகுதியில் போலீசை தொப்பிக்காரர் என்றும் தொப்பி என்றும்
அழைக்கிறார்கள். அதையே படத்துக்கு டைட்டிலா வைத்திருக்கிறோம்" என்கிறார்
இயக்குனர் யுரேகா.
Comments
Post a Comment