தல அஜீத் அடிக்கடி ஈசிஆர் ரோட்டில் சைக்கிளில் பயணம்!!! Thala Ajiths Cycle trip,Photo Gallery!!!

11th of May 2014
சென்னை::Thala Ajiths Cycle trip Photo Gallery!!!தல அஜீத்  அடிக்கடி ஈசிஆர் ரோட்டில் சைக்கிளில் பயணம்!!!
தல அஜீத் கார் ரேஸ் பிரியர். உலக அளவிலான கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி ஷாலினி, முக்கிய தயாரிப்பாளர்கள் அந்த ஆபத்தான கார் ரேஸ் வேண்டாம் என்று சொன்ன பிறகு கார் ரேஸ் செல்வதை நிறுத்திவிட்டார். அடுத்து பைக்கை கையில் எடுத்தார். ஆயிரக்கணக்கான மைல்கள் பைக்கிலேயே பயணம் செய்வார். சமீபத்தில் புனேயில் இருந்து பெங்களூருக்கு பைக்கிலேயே வந்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இப்போது அஜீத்தை அடிக்கடி ஈசிஆர் ரோட்டில் சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறதாம். ஒரு டவுசர், டீசர்ட், சின்ன ஹெல்மெட் கையில் ஒரு பேக் சகிதம் சைக்கிளில் கிளம்பி விடுகிறாராம். உடன் இரண்டு-மூன்று நண்பர்கள் மட்டும் செல்கிறார்கள். போகிற வழியில் சிறுவர்கள் தன்னை அடையாளம் கண்டுகொண்டால் ரோட்டோர மரத்தடியில் அவர்களுடன் உட்கார்ந்து மனம்விட்டு பேசிவிட்டுச் செல்கிறாராம்.
 
கவுதம் மேனன் இயக்கி வரும் படத்தில் அடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருப்பதாகவும். காலில் உள்ள பிரச்னையை தற்போதைக்கு சரிபடுத்திக் கொள்வதற்காகவும் இந்த சைக்கிள் பயணத்தை அடிக்கடி மேற்கொள்வதாகவும் அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்திற்குள் கவுதம் மேனன் படத்தை முடித்துவிட்டு, ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கிறார். படத்தில் அஜீத் கேரடக்டரின் பெயர் சத்யதேவ். அநேகமாக படத்தின் பெயரும் அதுவாகவே இருக்கலாம் என்கிறார்கள்.

Comments