Sonakshi New Hot Photo Shoot Stills! என்னுடன் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டார் சூப்பர் ஸ்டார்! - சோனாக்ஷியின் ஷூட்டிங் அனுபவம்!!!

5th of May 2014
சென்னை::Sonakshi New Hot Photo Shoot Stills! என்னுடன் நடிக்க ரொம்பவே நெர்வஸாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவருக்கு புதிய ஜோடியாகியுள்ள சோனாக்ஷி சின்ஹா. ரஜினியின் லிங்கா படத்தின் ஷூட்டிங் கடந்த மே 2-ம் தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பூஜையுடன் ஆரம்பித்தது. ரஜினி - சோனாக்ஷி சின்ஹாவின் டூயட்





















என்னுடன் நடிக்க ரொம்பவே நெர்வஸாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவருக்கு புதிய ஜோடியாகியுள்ள சோனாக்ஷி சின்ஹா. ரஜினியின் லிங்கா படத்தின் ஷூட்டிங் கடந்த மே 2-ம் தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பூஜையுடன் ஆரம்பித்தது. ரஜினி - சோனாக்ஷி சின்ஹாவின் டூயட் காட்சிதான் எடுத்த எடுப்பில் படமாக்கப்பட்டது. ரஜினியுடன் முதல் முதலில் நடித்த அனுபவம் குறித்து சோனாக்ஷி சின்ஹா பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் இதை விட ஒரு சிறப்பான துவக்கம் எனக்கு அமையாது. இந்தியில் என் முதல் படம் சல்மான்கானுடன் தொடங்கியது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என்பது பெருமையாக உள்ளது.

 இரண்டு தலைமுறைக்கிடையிலான உறவுகள் குறித்த படம் இது. இதில் நான் 1940-களில் வரும் பெண்ணாக நடித்துள்ளேன். அந்தத் தலைமுறை ரஜினிக்கு உதவ ஆரம்பித்து, அவர் மனம் கவரும் பெண்ணாக வருகிறேன். அந்த தோற்றம், செட்டிங்ஸ் எல்லாமே வித்தியாசமாக உள்ளது. எனக்கு ரொம்ப த்ரில்லாக இருந்தது.

ரஜினியும் என் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். சிறுவயதிலிருந்தே ரஜினியை அறிவேன். அவருடன் ஜோடியாக நடிப்பது தனி ஆர்வத்தைக் கிளப்புகிறது.

 லிங்கா பட செட்டில் முதல் முதலில் ரஜினியைச் சந்தித்ததும், அவருடன் நடிப்பதை நினைத்தால் ரொம்ப நெர்வஸாக இருப்பதாகச் சொன்னேன். ஆனால் அவரோ, 'நீ ஏம்மா நெர்வஸாகணும்... நீ என் நண்பரின் மகள்.. நான்தான் உன்னுடன் நடிப்பதை நினைத்து நெர்வஸாக உள்ளேன்', என்றார்.

 தான் எத்தனை பெரிய சூப்பர் ஸ்டார் என்பதையெல்லாம் நினைக்காமல், மிக எளிமையாக இருக்கிறார். எனக்கு வசதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் இருவருக்குமே எந்த உறுத்தலும் இல்லாதவாறு காட்சிகளை அமைக்கச் சொன்னார்," என்றார்.
 
சரி, ரஜினியுடன் நடிப்பதற்காக தந்தை சத்ருகன் சின்ஹா ஏதாவது குறிப்புகள் தந்தாரா? "இல்லை... அவர் எதுவும் சொல்லவில்லை. எனது தமிழ் அறிமுகம் ரஜினியுடன் தொடங்கியதில் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு இருவரின் நட்பும் புரியும். ரஜினியின் மகள்கள் என்னை தங்களின் சகோதரியாக நடத்துகின்றனர்.
தமிழை உச்சரிப்பது கஷ்டமாக இல்லை. சில தமிழ் வசனங்களை நன்றாகவே உச்சரித்தேன். விரைவில் முழுமையாகக் கற்றுக் கொள்வேன்," என்றார்..

Comments