சாலிகிராமத்தில் ‘ரெயின் ட்ராப்ஸ் அலுவலகம் : துவங்கி வைத்தார் பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா!!! Raindropss Office inauguration Photos!!!

27th of May 2014
சென்னை::இளைஞர்களை சமூக சேவையில் ஊக்கப்படுத்தும் விதமாக 2011ல் அரவிந்த் ஜெயபால் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் ‘ரெயின் ட்ராப்ஸ்’. இந்த அமைப்பின் நோக்கமே பொதுமக்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படங்கள் மற்றும் பாடல்களை தயாரித்து அதை மீடியாக்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.
 
இந்த அமைப்பின் இசையமைப்பாளராகவும் தூதராகவும் இருக்கிறார் ஏ.ஆர்.ரெஹைனா. நேற்று சாலிகிராமத்தில் இதற்கான அலுவலகத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரெஹைனா, சினிமா போட்டோகிராபர் ஸ்டில்ஸ் ரவி ஆகியோர் முன்னிலையில் துவங்கி வைத்தார் பின்னணி பாடகி சின்னக்குயில் ‘சித்ரா’. இந்தியாவிலேயே பொழுதுபோக்கு மீடியா மூலமாக சமூக விழிப்புணர்வு சேவை செய்வது இந்த ஒரு அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Comments