தமிழ்ப் படத்தில் காங்கோ நாட்டு இசைக் கலைஞர் பாடிய பாடல்!!! ganabala-vijay-antony-yabama-jo-sung-for-ainthamthalaimurai-sithvaithiya-sigamani Stills!!!

21st of May 2014
சென்னை::ganabala-vijay-antony-yabama-jo-sung-for-ainthamthalaimurai-sithvaithiya-sigamani Stills!!! தமிழ்ப் படத்தில் காங்கோ நாட்டு இசைக் கலைஞர் பாடிய பாடல்!!!
ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'. பரத், நந்திதா நடிப்பில் உருவாகும் இப்படத்தில், தம்பி ராமையா, ரேணுகா, இமான் அண்ணாச்சி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சூது கவ்வும் கருணா, மதன் பாப், சாம்ஸ், பாண்டு, சிங்கம்புலி, படவாகோபி, அன்பு, விமல், கோவைசெந்தில்,சுப்புராஜ், கோமல்குமார், கொட்டாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி எல்.ஜி.ரவிசந்தர், என்பவர் இயக்கும் இப்படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
   
இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் உள்ள ஐந்து பாடல்களும், ஒவ்வொன்றும் ஒரு ரகமாக, சிறப்பாக உருவாகியுள்ளதாம். இப்படத்தில் கானா பாலா எழுதிய ஒரு பாடலுக்கு இன்னொருவர் பாடினால் புதுமையாக இருக்குமே என்று இசையமைப்பாளர் சைமன் விரும்பியதால், காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞரான, யபாமா ஜோ (YABAMA JO) –வை அழைத்து வந்து பாட வைத்துள்ளார்கள். “ஏழரை...” என்று தொடங்கும் அந்த பாடல், அனைவரையும் ஆட வைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இசைப் பிரியர்களுக்கு இப்பாடல் ஒரு புதுமையான கொண்டாட்டம் தான், என்று கூறுகிறார்,  சைமன். இப்படத்தின் மற்றொரு பாடலான, யுகபாரதி எழுதிய "ஒண்ணுனா ரெண்டு..." என்ற பாடலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பாடியுள்ளார்.

Comments