தனுஷுக்கும் FB-598க்கும் என்ன சம்பந்தம்!!!

31st of May 2014
சென்னை:இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ‘பா’, ‘சீனிகம்’ என வித்தியாசமான படங்களை டைரக்ட் பண்ணி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு அமிதாப் பச்சன், நடிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார் பால்கி.
இந்தியில் ‘ராஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு இந்தப்படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் தனுஷ். தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தபடத்திற்கு FB-598 என பெயர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
 
FBன்னா ஃபேஸ்புக்னு தெரியுது.. ஆனா 598 எதுக்காக ? அதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் கேட்டால் படத்தின் கதைக்கும் அந்த எண்ணிற்கு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஆனால் அது சஸ்பென்ஸ் என்கிறார்கள்.
 
இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு ஸ்ரீராம் என பால்கியின் ஆஸ்தான கூட்டணிதான் இந்தப்படத்திலும்.. இதுவரை படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம்.

Comments