Dummy Tappasu Movie New Stills!!! தனது கானாவின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை கலக்க வருகிறார் தேவா!!!

3rd of May 2014
சென்னை::Tags : Dummy Tappasu New Movie Photos, Dummy Tappasu Latest Movie Gallery, Dummy Tappasu Unseen Movie Pictures, Dummy Tappasu Film Latest images, Dummy Tappasu Movie Hot Stills, Movie New Pics.ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.







ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.

தேனிசை தென்றல் என்ற பட்டத்தை தேவாவுக்கு ரசிகர்கள் கொடுத்தாலும், இவருடைய கானா பாடல் மக்களிடையே பெரும் பிரபலம். சென்னையில் பிரபலமாக விளங்கிய கானா பாடல்களை, தமிழ் சினிமாவில் நுழைத்தவர் இவர் தான். இவருடைய படங்களில் இடம்பெறும் கானா பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் பாட்லகளாக அமைந்தது.

இதற்கிடையில், இயல் இசை நாடக மன்றத்தில் திவாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டு அரசு பணியில் தீவிரம் காட்டி வந்த தேவா, தற்பொது 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் மீண்டும் இசையமைக்க வருகிறார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஜனநாதன் கலந்துக் கொண்டு பாடல்களை வெளியிட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பெற்றுக்கொண்டார்.

படத்தின் பாடல்களைப் பற்றி தேவா கூறும்போது, "படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது. அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தின் கதை எனக்கு பிடித்துப் போகவே இதில் இசையமைக்க ஒத்துக்கொண்டேன். மேலும் விஜயா சாகரின் எளிமையான வரிகள் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும்." என்றார்.

மத்திய சென்னையில் குடிசை பகுதியில் வாழக்கூடிய பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையே ஏற்படும் காதலை காமெடியாக உருவாகியுள்ள ‘டம்மி டப்பாசு’ படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் இரண்டு பாடல்களை தேவா பாடியுள்ளார். அதில் ஒன்று கானா பாடல்.  இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் வித்தியாசமான முறையில் உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்ட பாடல்கள் அனைவரும், வந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளியான பிறகு இனி, தமிழகத்தில் தேவாவின் கானா கலக்கும் என்பது உறுதி.

இப்படத்தில் நாயகனாக மலையாள நகைச்சுவை நடிகர் பிரவீன் பிரேம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் அறிமுகமாகிறார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். நன்கு தமிழ் பேசக்கூடிய ரம்யா பாண்டியன்,  இப்படத்திற்காக சென்னை தமிழை பயிற்சிப் பெற்று, சொந்தக் குரலில் பேசியுள்ளார். இப்படத்திற்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ரவி இயக்கியிருக்கிறார்.

Comments