Director Vijay and Actress Amala Paul Press Meet Photos!!! நான் காதலித்து, கல்யாணம் செய்யப்போவது என் தோழியை தான்: இயக்குநர் விஜய்!!!
27th of May 2014
சென்னை::Tags : Director Vijay and Actress Amala Paul Media Meet Stills, Director Vijay and Actress Amala Paul Press Meet Gallery Pics, Director Vijay and Actress Amala Paul Press Meet images, Director Vijay and Actress Amala Paul Meet Media Peoples Pictures, Director Vijay and Actress Amala Paul Press Meet Event Photos..
நான் காதலித்து, கல்யாணம் செய்யப்போவது என் தோழியை தான் என இயக்குநர் விஜய்.செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய்..
நான் காதலித்து, கல்யாணம் செய்யப்போவது என் தோழியை தான் என இயக்குநர் விஜய்.செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய்..
நான் காதலித்து, கல்யாணம் செய்யப்போவது என் தோழியை தான் என இயக்குநர்
விஜய், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிரீடம், மதராசப்பட்டினம்,
தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய்.
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும்
தெய்வத்திருமகள் படத்தில் இணைந்தபோது காதல் மலர்ந்தது. தற்போது இருவரும்
திருமணம் செய்ய இருக்கின்றனர். ஜூன் 12ம் தேதி சென்னை, எம்.ஆர்.பி.,
மஹாலில் திருமணம் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து அன்று மாலையே திருமண
வரவேற்பு நடக்கிறது. இதனை முறைப்படி இன்று(மே 26ம் தேதி) பத்திரிகையாளர்களை
சந்தித்து அறிவித்தனர் விஜய்யும்-அமலாபாலும்...!
செய்தியாளர்களிடம் பேசிய விஜய்,
நான் 2007ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானேன். தொடர்ந்து இப்போது
வரை
படங்கள் இயக்கி கொண்டு வருகிறேன். நான் இந்தளவுக்கு இங்கு முன்னேறியதற்கு
பத்திரிகையாளர்களாகிய நீங்களும் ஒரு முக்கிய காரணம். நான் இப்போது
வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு போகிறேன். எனக்கும், அமலாபாலுக்கும்
முதலில் நட்பாகத்தான் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நல்ல தோழியாகத்தான் அமலாபால்
இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பேசி காதலிக்க
தொடங்கினோம். அப்போது நாங்கள் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எட்டு
மாதத்திற்கு முன்பு தான் திருமணம் பற்றிய யோசனையே வந்தது. பிறகு இருவரது
வீட்டிலும் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினோம். அந்த வகையில், நான்
காதலித்து கரம் பிடிக்க இருப்பது எனது தோழியைத்தான். என்னைப்பற்றிய ப்ளஸ்,
மைனஸ் எல்லாம் அமலாவுக்கு தெரியும். எங்கள் காதலுக்கு சம்மதம் சொன்ன
எங்களது இருவரது பெற்றோருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து
கொள்கிறோம். நான் இயக்கியுள்ள வைசம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
ரெட் ஜெயன்ட் உதயநிதி தான் படத்தை வெளியிடுகிறார் என்றார்.
பின்னர் பேசிய அமலாபால்,
இதுநாள்
வரை எனது படங்கள் தொடர்பான பிரஸ்மீட்டில் தான் நான் பங்கேற்று உள்ளேன்.
முதன்முறையாக என் வாழ்க்கை சம்பந்தமான பிரஸ்மீட்டில் பங்கேற்கிறேன். நான்
இந்தளவுக்கு வளர காரணம் நீங்கள் தான்(பத்திரிகையாளர்கள்) காரணம். மைனா
படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு, 10 படங்களில் கிடைத்த வெற்றியை விட
அதிகமானது. நானும், விஜய்யும் திருமணம் செய்ய இருக்கிறோம். திருமணத்திற்கு
பிறகு நடிப்பேனா என்பது பற்றி தெரியாது. ஆனால் நல்ல கதைகள், வித்தியாசமான
ரோல்கள் அமையும் பட்சத்தில் நடிப்பதை பற்றி யோசிப்பேன். ஆனால் எப்பவுமே
விஜய்க்கு தான் எனது முதல் முன்னுரிமை, எனக்கு அவர் தான் முக்கியம்
என்றார்.
Comments
Post a Comment