சென்னையில் முதல்முறையாக பெண்கள் சர்வதேச திரைப்படவிழா!!! Chennai Women's International Film Festival Press Meet!!!

21st of May 2014
சென்னை::சினிமாதுறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தோடு நடைபெறுகிறது -சென்னை பெண்கள் சர்வதேச திரைப்படவிழா. இன்று சென்னையில் உள்ள

சினிமாதுறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தோடு நடைபெறுகிறது -சென்னை பெண்கள் சர்வதேச திரைப்படவிழா. இன்று சென்னையில் உள்ள வாணிமகாலில் நடைபெற உள்ள தொடக்கவிழாவுடன் இந்த விழா துவங்கும். இவ்விழாவிற்கு 177 திரைப்படங்கள்உலகஅளவில் 26 நாடுகளில்இருந்து வந்து குவிந்துள்ளன. இவைஅனைத்தும் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி திரையரங்கம், மற்றும் அமிஞ்சிக்கரையில் உள்ள பி.வி.ஆர். திரையரங்கத்திலும் 20 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை திரையிடப்படுகின்றன.
 
குறும்படம், விளம்பரப்படம், ஆவணப்படம், முழுநீளத்திரைப்படம் என மொத்தம் நான்குபிரிவுகளில் திரைப்படங்கள்வகுக்கப்பட்டன. பெண் இயக்குனர்களான ஜெ.எஸ்.நந்தினி மற்றும் வி.பிரியா, மதன் ஆகியோர் தகுதியான படங்களைத் தேர்ந்தெடுத்து தர அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுமாம். கிரேசிமோகன் மற்றும், பிரதாப்போத்தன் ஆகியோரும் ஆலோசகராக உள்ளனர். விஜய்பட்கர், ஜெர்மன்நாட்டை சார்ந்த நடிகை தேனுகா கந்தராஜா மற்றும் பலநாடுகளை சேர்ந்த பிரபலங்களும் இந்த விழாவில் பங்களித்துள்ளனர். இறுதியாக 25-5-2014 அன்றுமாலை 6மணி அளவில் விருது வழங்கும் விழா எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ளது. வெற்றிவாகை சூடிய திரைப்படங்களுக்கு பரிசாககோப்பை, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தொடக்க விழாவிற்கும், விருது வழங்கும் விழாவிற்கும் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

Comments