15th of May 2014
சென்னை::நடிகை ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதை மறுபரிசீலனை செய்து தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ‘குத்து ரம்யா கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆன பிறகு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார். ஒப்புக்கொண்ட படங்களில்கூட நடிக்க மறுத்ததால் தயாரிப்பாளர்களுடன் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்து தர சம்மதித்தார். சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. மாண்டியா தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். வாக்குப் பதிவு முடிந்த பிறகு வெளியான கருத்து கணிப்பில் ரம்யா தோற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.இதையறிந்து ஷாக் ஆனார் ரம்யா. தோல்வி நிலை ஏற்பட்டிருப்பதால் நடிப்புக்கு முழுக்கு போட இருந்த முடிவை மறுபரிசீலனை செய்திருக்கிறார். இதுபற்றி தனது இணைய தள பக்கத்தில், ‘வெற்றி தோல்வி வாழ்க்கையின் ஒரு அங்கம். எனக்கு எம்பியாக பணியாற்ற இதுவரை வாய்ப்பு தந்தனர். அதை ஏற்று ஓய்வில்லாமல் மக்களுக்காக உழைத்தேன்.
மாண்டியா தொகுதி எனது குடும்பம். தேர்தல் முடிவு பற்றி கவலை இல்லை. வெற்றி பெற்றால் தொகுதி பணியை தொடருவேன். இல்லையென்றால் எப்போதும்போல் வாழ்க்கையை தொடருவேன். அன்புடனும், சந்தோஷமுடனும் வாழ வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். தேர்தலில் தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவை கைவிட ரம்யா திட்டமிட்டுள்ளார்....
Comments
Post a Comment